உலக மருந்தாளுநர் தினம் சர்வதேச மருந்தாளுனர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் உள்ள மருந்தாளுநர்களால் கொண்டாடப்படுகிறது.
மருத்துவம் என்பது நோயை கண்டறிந்து அதை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கும் முறை , நோயின் தன்மை, நோயாளியின் நிலை இவற்றை அறிந்து வழங்கப்படும் மருந்து, என்று இரு நிலைகள் உள்ளது இதில் நோய் , நோயின் காரணி, நோயின் நிலை அதை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த அதற்க்கு உண்டான சிகிச்சை முறை இவற்றை வழங்க மருத்துவர். நோயாளியின் நிலை, வயது அவர் உட்கொள்ளும் வேறு மருந்துகள், ஒவ்வாமை, இரண்டு மருந்துகளுக்குள் ஏற்படும் வேதியல் மாற்றம், மருந்துகளின் பக்கவிளைவுகள் இவற்றை கருத்தில் கொண்டு மருந்தை அதன் சரியான அளவில் வழங்க மருந்தாளுநர் , நோயுற்றவரை பேணி பாதுகாத்து முறைப்படி சிகிச்சையும், மருந்துகளும் கிடைப்பதை கவனிக்க செவிலியர் என இவர்கள் மூவரின் கூட்டு முயற்சியே மருத்துவம் .
பழங்காலத்தில் மருத்துவரும் மருந்தாளுநரும் ஒருவரே இன்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகளில் மருத்துவரும் மருந்தாளுநரும் ஒருவராகவே உள்ளனர் நவீன மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சை அளிப்பவர் மருத்துவர் மற்றும் சிகிச்சைக்குரிய மருந்தை அளிப்பவர் மருந்தாளுநர் என்று வேறுபடுத்தபட்டுள்ளனர் ஆனால் நமது நாட்டில் வெறும் மருந்தை விநியோகிக்கும் நபராகவே மருந்தாளுநர்கள் உள்ளனர் பெரும்பாலான மருத்துவமனைகளிலும்,மருந்து கடைகளிலும் மருந்தாளுநர்கள் அல்லாமல் மற்ற தகுதி அற்ற நபர்கள் மருந்தை கையாளுகின்றனர் மருந்தியல் பட்டயமோ, பட்டமோ பெற்றவர்கள் தான் மருந்தை கையாள வேண்டும் என்று விதிகளும், சட்டமும் உள்ளது ஆனால் மருந்தாளுநர்களின் பதிவு சான்றை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு பெற்று இன்று மருந்தகங்கள் இயங்குகின்றன இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும், மருந்தாளுநர்களின் உரிமைகளை பெற்று தரவேண்டிய பொறுப்பு அகில இந்திய மருந்தாளுநர் கவுன்சிலுக்கும் உள்ளது ஆனால் அவர்கள் இதில் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததில்லை போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது எவ்வளவு தவறோ அது போலவே போலி மருந்தாளுநர்கள் மருந்தை கையாள்வதும் தவறு மேலும் மருந்தை நோயுற்றவர்களுக்கு வழங்கும்போது நோயுற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்து அதை பயன்படுத்தும் முறை,ஒவ்வாமை, பக்கவிளைவுகள் போன்றவற்றை அவர்களுக்கு விளக்கி வழங்கப்பட்ட மருந்து முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பும் நோயுற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுப்பும் மருந்தாளுநர்களுக்கு உண்டு ஆனால் பெரிய மருத்துவமணைகளில் கூட மருந்தாளுநர்கள் நோயுற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில்லை ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தில் பாதி அளவு கூட மருந்தாளுநர்களுக்கு வழங்கப்படுவதில்லை இதிலும் மாற்றம் ஏற்பட்டால் தான் மருந்து குறித்த ஐயம் நீங்கி நம்பிக்கையோடு மருந்தை நோயுற்றவர்கள் எடுக்கும் நிலை உருவாகும்.
மருந்தாளுநர்கள் மருந்து ஆராய்ச்சி, மருந்து உற்பத்தி, மருந்து விநியோகம் என்று மூன்று நிலைகளில் பணியாற்றுகின்றனர் இதில் மருந்தியல் பட்டய படிப்பு நோயுற்றவர்களுக்கு மருந்தை வழங்கவும், மருந்தியல் பட்டம் பெற்றவர்கள் மருந்து உற்பத்தியில் பணியாற்றவும், மருந்தியல் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மருந்து ஆராய்ச்சிகளிலும் ஈடுபடும் வண்ணம் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது அனால் இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற நவீன மருந்து உற்பத்தி நடைமுறைகள் பற்றியோ இவற்றில் பல்வேறு ஆராய்ச்சியும் புதிய உத்திகளும், மருந்துகளும் ஆனால் நம் நாட்டில் மருத்துவரே மருந்தாளுநரின் பணியையும் மேற்கொள்கிறார் வெறும் மருந்து விநியோகிக்கும் வேலையை மட்டுமே மருந்தாளுநர்கள் செய்கிறார்கள்